*உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு தீர்ப்பு விபரம்*

*தீர்ப்பு*

*உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு தீர்ப்பு விபரம்*

A1 சின்னசாமி  (அப்பா ) 
தூக்கு தண்டனை

A2 அன்னலட்சுமி ( அம்மா ) விடுதலை

A3 பாண்டித்துரை(  தாய் மாமா)  விடுதலை

A4  ஜெகதீசன் 
தூக்கு தண்டனை
1.30 லட்சம் அபராதம்

A5 மணிகண்டன்
தூக்கு தண்டனை

A6  செல்வக்குமார் தூக்குதண்டனை

A7 கலை தமிழ்வாணன்
தூக்குதண்டனை

A8  மதன் (எ) மைக்கேல்
தூக்கு தண்டனை

A9 ஸ்டீபன் தன்ராஜ்
இரட்டை ஆயுள் தண்டனை

A10 பிரசன்னா
விடுதலை

A11 மணிகண்டன்
5 ஆண்டு சிறை

தீர்ப்பு விதித்து அலமேலு நடராஜன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
நேற்று வரலாற்று சிறப்பு வாய்ந்த நாள் :
***********************
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சங்கர் அவர்களை பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகள் ஆறுபேருக்கு இரட்டை ஆயுள், இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தீர்பளித்தது திருப்பூர் மாவட்ட நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு :

1) கொலை நடந்த அன்று நமக்கு கிடைத்த கண்காணிப்புக் கேமரா வீடியோ பதிவு.

2)சங்கரின் மனைவி கெளசல்யாவின் உறுதியான போராட்டம்.
இவை இரண்டும் இல்லையென்றால் இந்த கொலையையும் ரயில் தண்டவாளத்தில் போட்டு தற்கொலை என்று மாற்றி இருப்பார்கள் சாதிவெறியர்கள்.

பல ஆணவப் படுகொலைகளுக்கு இதுபோன்று கேமரா பதிவு இருந்திருந்தால் பலபேருக்கு நீதி கிடைத்திருக்கும்,தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள சாதி, மத வெறியர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கும்.

நன்றி, கண்காணிப்பு கேமரா மற்றும் கெளசல்யா சங்கருக்கு.

Comments