பாஜகவின் தலித் பாசம் :
__________________________________
இந்தியாவில் மதவெறியினாலும், சாதி வெறியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு சிதறுண்டு கிடக்குற தலித் சமுதாய மக்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வருகைக்குப் பிறகு ஓரளவிற்கு எழுச்சிப் பெற்று வருகிறார்கள்.
மீண்டும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க மதவெறியும், சாதிவெறியும் தலைதூக்க ஆரம்பித்து விட்டன.
அவற்றின் முதல் ஆயுதம்தான் RSS. அதன் கிளைகள் பாஜக, சிவசேனா, பாமக இன்னும் பல சாதி வெறிக் கட்சிகள்.
இவற்றிற்கான ஆதாரம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகள், மதக் கலவரங்கள், தற்போது நடைமுறைப்படுத்த பட்டிருக்கும் தலித் மக்களின் உணவான மாட்டிறைச்சிக்கு தடை போன்ற எண்ணற்ற ஒடுக்கு முறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உத்திரப் பிரதேசத்தில் புதியதாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, அந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்களை எப்படி எல்லாம் இழிவு படுத்திவருகிறது என்பதை நாடே அறியும்.
இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது.
தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் :
---------------------------------------------------------------------- ஆண்டு - 2013 2014
_____ _______
ராஜஸ்தான் - 6475 8028
மத்திய பிரதேசம் -2945 4151
சதீஸ்கர் -242 1066
இந்தியா முழுவதும் 2013 -ல் 676 தலித்துகள் கொலை செயபட்டார்கள், 2014 -ல் 744-ஆக அதிகரித்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் 2073 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்,
2014 -ல் 2233-ஆக உயர்ந்துள்ளது.
(ஆதாரம்: எழுத்தாளர் ரவிக்குமார், பி. பி.சி. தமிழ். காம்)
இவர்களது ஆட்சி இவ்வாறு இருக்க இவர்கள் எப்படி தலித் மக்களுக்கு பாதுகாப்பு தரப்போகிறார்கள்.
இத்தகைய கொடுமைகளையெல்லாம் மறைக்க அவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்பவரை இந்தியாவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள்.
ராம்நாத் கோவிந்த் என்பவர் யார்?
இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வந்தால் தலித் மக்கள் இது போன்ற சாதி, மத வெறியர்களிடம் இருந்து காப்பாற்றப்படுவார்களா?
தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் உயருமா?
என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.
அத்தகைய செயல் நடக்க வாய்ப்பே இல்லை.
இந்துக்கள் நம்பும் ராமவதாரத்தில் அரக்கர்கள் இனத்தின் அரசன் இரண்யனின் மகனான பிரகலாதனை எப்படி கருவில் இருந்தே ராம நாமத்தைச் சொல்லி வளர்த்து அவன் மூலமாக ராமன் பன்றி அவதாரம் எடுத்து இரண்யனைக் கொன்றானோ!
அதுபோல சேரியில் பிறந்த ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இந்துத்துவ வெறியை புகுத்தி வளர்த்து பிரதமர் மோடி மூலமாக தலித்துகளை அழிக்கும் ஆயுதமாக இவர் இருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
ஆகவே இது போன்ற இந்து மத வெறி உணர்வுடன் இருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை புறக்கணித்து விட்டு
பொதுவான சிந்தனை உடைய, தலித்மக்கள் மீது அக்கறை உடைய தலித் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அப்பொழுதான் தலித் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவண்,
சு. ஈசன்
ஒன்றியச் செயலாளர்
கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
Comments
Post a Comment